ஒரே நாளில் 400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அறிவிப்பு!
உக்ரைன் – ரஷ்ய போர் ஒரு வருடத்தை கடந்து நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்றைய தினம் குறைந்தது 400 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 206,600 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷ்ய இழப்புகள் பற்றிய தினசரி புதுப்பிப்பில், உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் 3,797 டாங்கிகள் மற்றும் 2,993 ட்ரோன்களையும் அழித்ததாகக் கூறியுள்ளது.





