கனடா முழுவதும் பற்றியெரியும் காட்டுத்தீயால் ஆபத்தில் இரண்டு இனங்கள்
கனடா முன்னெப்போதும் இல்லாத காட்டுத்தீயை எதிர்கொண்டுள்ள நிலையில், கால்கரியின் வனவிலங்கு இன்ஸ்டிடியூட் ஆபத்தில் இருக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான வழிகளைத் தேடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் காட்டுத் தீ அவர்களின் வாழ்விடத்தை அடைந்தால் உள்ளூரில் அவை இல்லாத நிலை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
கால்கரியின் வனவிலங்கு இன்ஸ்டிடியூட் தற்போது அருகிவரும் இனங்களான greater sage grouse, burrowing owl மற்றும் half-moon hairstreak butterfly ஆகிய இனங்களை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் தற்போது கனடாவின் முக்கிய பகுதிகளில் காட்டுத்தீ பற்றியெரிந்து வரும் நிலையில், ஆல்பர்ட்டா பகுதியில் காணப்படும் அரிதான whooping crane பறவை மற்றும் ஒன்ராறியோவில் அரிதாகிவரும் wood-poppy என்ற பூவினத்தையும் பாதுகாக்க கவனம் செலுத்துகின்றனர்.
குறிப்பிட்ட இனங்கள் அழிக்கப்பட்டால், ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு அதன் சமநிலையில் இருந்து தூக்கி எறியப்படும் என வனவிலங்கு இன்ஸ்டிடியூட்டின் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, புகை மிகுந்த சூழலில் வாழ்வதால், பறவைகளுக்கு அதன் நுரையீரலில் சிக்கலை ஏற்படுத்தும், இணையைத் தேடுவதிலும் பாதிப்பு ஏற்படும். மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் போலவே மிருகங்களும் பறவைகளும் சிக்கலை எதிர்கொள்ளும் என்றார்.