கென்யாவில் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் மரணம்

கென்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடிங்காவின் (Raila Odinga) இறுதிச் சடங்கில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 163 பேர் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றதாகவும் 34 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கென்ய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று ஒடிங்காவின் உடலைப் பார்க்க கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதற்கு அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆரம்பத்தில் ரைலா ஒடிங்காவின் உடல் அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டிடத்தில் வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்ததால் நைரோபியின் கசராணி (Kasarani) பகுதியில் உள்ள மோய் சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு (Moi International Stadium) மாற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கென்யாவில் ரைலா ஒடிங்காவிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் மரணம்
கென்யாவின் மூத்த அரசியல்வாதி ரைலா ஒடிங்கா (Raila Odinga) காலமானார்!