உலகம் செய்தி

கென்யாவில் ரைலா ஒடிங்காவிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் மரணம்

இந்த வாரம் உயிரிழந்த கென்யாவின் மூத்த அரசியல்வாதி ரைலா ஒடிங்காவின் (Raila Odinga) உடலைப் பார்க்க கூடியிருந்த துக்கக் கூட்டத்தினரை கலைக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் நைரோபியில் (Nairobi) உள்ள 60,000 பேர் அமரக்கூடிய கால்பந்து மைதானத்தில் அஞ்சலிக்காக ரைலா ஒடிங்காவின் உடல் வைக்கப்பட்டிருந்த போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினர் நேரடி வெடிமருந்துகளைப் பயன்படுத்தினார்களா அல்லது ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் ரைலா ஒடிங்காவின் உடல் அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டிடத்தில் வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்ததால் நைரோபியின் கசராணி (Kasarani) பகுதியில் உள்ள மோய் சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு (Moi International Stadium) மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

கென்யாவின் மூத்த அரசியல்வாதி ரைலா ஒடிங்கா (Raila Odinga) காலமானார்!

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி