ட்ரம்பால் உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் -கடும் கோபத்தில் FIFA அதிகாரிகள்
2026ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையை நடத்தும் நகரங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்திற்கு FIFA அதிகாரிகள் கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
போட்டிகள் நடைபெறும் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டில் போன்ற நகரங்கள் தீவிர இடதுசாரி வெறியர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவை உலகக் கோப்பைக்கு ஆபத்தாக உள்ளதென உணர்ந்தால், அவற்றை அகற்றுவேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை என FIFA துணை தலைவர் விக்டர் மொன்டாக்லியானி குறிப்பிட்டுள்ளார்.
போட்டி நகரங்களை மாற்றுவதற்கான எந்தவொரு முடிவையும் ஒரு தேசியத் தலைவரால் அல்ல, FIFA எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கால்பந்து தொடர்பான முடிவுகள் FIFAவால் எடுக்கப்படுகின்றன எனவும் உலகத் தலைவர்களை விட கால்பந்து மிகவும் சக்தி வாய்ந்தது எனவும் FIFA அதிகாரிகள் வலியுறுத்தினர்.
2026ஆம் ஆண்டு காற்பந்து உலகக் கோப்பையை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.





