ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.
இரு நாடுகளுக்கும் இடையே சமாதான முயற்சிகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் டிரம்ப், அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
”அனைத்து நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, ரஷ்ய பெட்ரோலியத்தை வாங்கும் சீனாவிற்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரிகளை விதித்தால், ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனா மற்றும் இந்தியாவிற்குப் பிறகு ரஷ்ய எண்ணெயை வாங்கும் மூன்றாவது பெரிய நாடாக நேட்டோ உறுப்பினர் துருக்கி இருந்து வருகிறது.