உலகம்

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ட்ரம்ப் – நிறைவுக்கு வரும் வர்த்தக போர்!

தெற்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப், சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என அமெரிக்க கருவூல செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் டிக்டொக்கின் (TikTok) அமெரிக்க செயல்பாடுகள், சீனாவின் அரிய மண் தாதுக்கள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரங்கில் இவ்விரு நாடுகளின் மோதல் பாரிய பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் இந்த சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ( Xi Jinping) ஆகியோர் வரும் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீன அரசாங்கம், இரு பேச்சுவார்த்தை குழுக்களும் “தங்கள் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஒரு அடிப்படை ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன” என்று   தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 6 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்