கனடா மீது கூடுதலாக வரி விதித்த ட்ரம்ப்!
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை அதிகரிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, டொனால்ட் டிரம்ப் தற்போது செலுத்தும் வரிகளுக்கு கூடுதலாக கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% வரியை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் உரையை சிதைக்கும் வரி விளம்பரத்தை கனடா உருவாக்கியதை அடுத்து அந்நாட்டுடான வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போதைய வரி விதிப்புகளை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிற்கு வெளியே உள்ள நாடுகளுக்கு தனது நாட்டின் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) முன்னதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




