இலங்கை

பொலிஸாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் மாவீர்களுக்கு அஞ்சலி!

பொலிஸாரின் பல தடைகளையும் மீறிய வகையில் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவடிமுன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாரின் பல்வேறு தடைகளுக்கும் மத்தியில் மாவீரர் தின நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ உணர்வூபூர்வமாக நடைபெற்றது.

மழைக்கு மத்தியிலும் மாவீரரின் தாய் ஒருவர் பிரதான ஈகச்சுடர் ஏற்ற ஏனையவர்கள் ஈகச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கொட்டும் மழைக்கும் மத்தியில் கலந்துகொண்டு ஈகை சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது அஞ்சலி செலுத்தும் இடத்திற்குள் சப்பாத்துக்கால்களுடன் பொலிஸார் நுழைந்து குறித்த தீபங்கள் ஏற்றமுடியாது என கூறியபோதிலும் அங்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பொலிஸார் சப்பாத்துக்கால்களுடன் நுழைந்தமை தொடர்ந்து அங்கிருந்த மததத்தலைவர்கள், மாவீரர்களின் பெற்றோர் உறவினர்களினால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்