வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கடுமையான தீர்மானம் – தமிழரசு கட்சி எச்சரிக்கை
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உட்பட தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் கடுமையான தீர்மானமொன்று எடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேச்சு நடத்துவதற்கு நேரம் கோரி இருந்தோம்.
கடந்த ஜுலை மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும் அதற்குரிய பதில் ஜனாதிபதி தரப்பில் இருந்து இன்னும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
“ தமிழரசுக் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியாகும். அக்கட்சியால் வழங்கப்பட்ட கடிதத்துக்கு ஜனாதிபதியொருவர் பதில் வழங்காமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
எனவே, வரவு- செலவுத் திட்டம் பற்றி நாமும் காத்திரமானதொரு முடிவை எடுக்க வேண்டும்.
நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதற்கு எனக்கு தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நான் பங்கேற்கமாட்டேன். எமது கட்சியும் பங்கேற்காது.” – எனவும் சாணக்கியன் எம்.பி. குறிப்பிட்டார்.




