உலக பெருங்கடல் தினம் இன்று! அறிந்திருக்க வேண்டியவை
சர்வதேச பெருங்கடல் தினமான இன்று கடல் வளத்தை காப்போம். கடல் பாதுகாப்பை உறுதிசெய்வோம்.கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.
பரந்து விரிந்த இந்த புவி பரப்பில் மனிதர்கள் மட்டும் இன்றி ஏராளமாக உயிரினங்கள், புல், பூண்டுகள், கடல்வாழ் உயிரிகள் வாழுகின்றனர். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இந்த புவியில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் வாழ்வதை உறுதிப்படத்தினால்தான் இங்கு மனித சமூகத்தின் இருப்பை தக்க வைக்க இயலும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடல் பூமியின் மேற்பரப்பில் 70% க்கும் அதிகமான பகுதியை உள்ளடக்கியது
அந்த வகையில் மனித குல வாழ்விற்கு உதவுவதில் கடலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்டங்களை ஒன்றிணைப்பது வாணிபம் செய்வது, உலகின் பல நாடுகளின் போக்கு வரத்து என பல தேவைகள் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. அதுமட்டும் இல்லாமல் கடல் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது. அத்தோடு நின்று விடாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதில் கடல் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிலையில் காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க உதவுகிறது. இயற்கையின் சுழற்சியிலும் கடல் பெரும் பங்காகற்றுகிறது.
இந்நிலையில் தற்போதைய சூழலில் கடல் பெரும்பாலும் மாசடைந்து உள்ளது. கடலில் பிளாஸ்டிக் மாசுகள், நச்சுக்கழிவுகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் கடலின் ஆரோக்கியத்தை பெரும் கேள்விக்குறியாக மாற்றுகிறது.
ஐக்கிய நாடுள் சபையில் பெருங்கடல்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது முதன்முதலில் 1992 இல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டில் கனடாவின் கடல் மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் மற்றும் கனடாவின் ஓஷன் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றால் முன்மொழியப்பட்டது. இந்த நிகழ்வு 2008 இல் ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
உலகில் சிறப்பு வாய்ந்த கடல் பரப்புகள், மனிதர்களின் அதித ஆசை மற்றும் அறியாமை நடவடிக்கையின் காரணமாக குப்பை கிடங்காகவும் மாறிக்கொண்டிருக்கிறது. மருத்துவக் கழிவுகள், எண்ணெய் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை கடலில் கொட்டப்படுவதை பல்வேறு ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்நிலையில் கடலில் தூய்மையை உறுதிப்படுத்த அதுகுறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதோடு இந்த முக்கிய வளங்களைப் பாதுகாத்து, நிலையானதாகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டு உலக கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கிரகப் பெருங்கடல்: அலைகள் மாறுகின்றன என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படுகிறது
இந்நிலையில் சர்வதேச பெருங்கடல் தினமான இன்று கடல் வளத்தை காப்போம். கடல் பாதுகாப்பை உறுதிசெய்வோம்.கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.