இலங்கையில் அச்சுறுத்தும் இன்புளுவன்ஸா தொற்று – சுகாதார பிரிவு எச்சரிக்கை
இலங்கையில் இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்புளுவன்ஸா வைரஸ் சுவாசக் குழாயைப் பாதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, இருமல், தும்மல், சோர்வு போன்ற அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்படும்.
எனவே, இந்த அறிகுறிகளுடன் குழந்தைகள் இருந்தால், முறையான மருத்துவ சிகிச்சையைப் பெறுவது நல்லது.
இன்புளுவன்ஸா மற்றவர்களுக்கு எளிதில் பரவும் என்பதால், சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத் துறைகள் சுட்டிக்காட்டுகின்றன.
(Visited 2 times, 1 visits today)