3 நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்
இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள்(Pakistan) பல்வேறு நாடுகளிலிருந்து பிச்சை எடுத்ததற்காக நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பின்(FIA) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினர் அகா ரஃபியுல்லா(Agha Rafiullah) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்டுள்ளது.
இந்த ஆண்டு பிச்சை எடுத்ததற்காக மொத்தம் 51,000 பாகிஸ்தானியர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ராஜா ரிஃபத் முக்தார்(Raja Rifaat Mukhtar) தெரிவித்துள்ளார்.
இதில் சவுதி அரேபியா(Saudi Arabia) 24,000 பாகிஸ்தானியர்களையும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(United Arab Emirates) 6,000 பேரையும், அஜர்பைஜான்(Azerbaijan) 2,500 பேரையும் திருப்பி அனுப்பியுள்ளது.





