முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட பெண்… முகத்தில் குத்திய பொலிஸ் அதிகாரி
அமெரிக்காவில் கைவிலங்கிடப்பட்ட பெண் தன் மீது எச்சில் உமிழ்ந்ததால், பொலிஸ் அதிகாரி முகத்தில் குத்தியது குறித்த வீடியோ வைரலானது.
கொலராடோ மாகாணத்தில் ஏஞ்சலியா ஹால் என்ற பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.அவரது கைகள் விலங்கினால் பூட்டப்பட்டிருந்தது. அப்போது அப்பெண் லவ்லேண்ட் அதிகாரி ரஸ்ஸல் மராண்டோ மீது எச்சில் உமிழ்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரி ஏஞ்சலியா முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.உடனே அறையில் இருந்த மற்றொரு அதிகாரி தலையிட்டு மராண்டோவை விலக்கினார்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து லவ்லேண்ட் காவல்துறைத் தலைவர் டிம் டோரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், ‘நான் இந்த வீடியோவை வெளிப்படைத்தன்மையுடன் பகிர்கிறேன். மேலும் எனது குழு மற்றும் சட்டத்தை மீறும் குடிமக்கள் இருவரையும் அவர்களின் செயல்களுக்கு பொறுப்புக் கூறுவேன்’ என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மே 20 அன்று நடந்த சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு லவ்லேண்ட் காவல்துறையில் இருந்து மராண்டோ நீக்கப்பட்டார். அதேபோல் ஏஞ்சலியா ஹால் மீது அதிகாரியை நோக்கி அவர் செய்த செயலுக்காக மூன்றாம் நிலை தாக்குதல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க து.