கரீபியின் கடற்பகுதியில் மற்றொரு டேங்கர் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!
கரீபியன் கடலின் சர்வதேச எல்லைப் பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்க படையினர் அறிவித்துள்ளனர்.
குறித்த நடவடிக்க நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடலோர காவல்படையால் மேற்கொள்ளப்பட்ட விடியற்காலை நடவடிக்கைக்கு பாதுகாப்புத் துறை ஆதரவளிப்பதாக கூறிய அவர், டேங்கர் கடைசியாக வெனிசுலா துறைமுகத்தை அடைந்ததாக கூறினார்.
போதைப்பொருள் வர்த்தகத்திற்கு நிதியளிப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் டேங்கர் கப்பல்களை தடுத்து நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்திருந்த சில நாட்களுக்கு பிறகு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டிசம்பர் 10 அன்று, அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர்களின் ஆதரவுடன், எண்ணெய் கப்பல் ஒன்றை பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





