UKவில் தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ் அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்சினை!
பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 03 மாதங்களில் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இது முந்தைய காலாண்டை விட 0.1 சதவீதம் அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குப் பிறகு அல்லது 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மிக உயர்ந்த வேலையின்மை விகிதத்தை இது குறிக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தால் குறைந்து 30.3 மில்லியனை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே அக்டோபர் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் தினசரி வருவாய் வளர்ச்சியும் 4.6 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஸ்டீபன் கின்னாக் ( Stephen Kinnock) அதிக வேலைகளைப் பெறுவதிலும், சிறந்த ஊதியம் பெறும் வேலைகளைப் பெறுவதிலும்” முழுமையாக கவனம் செலுத்துகிறது எனக் கூறியுள்ளார்.





