Site icon Tamil News

தமிழகத்தில் அரசின் எச்சரிக்கையை மீறியதாக 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார்!

தமிழ்நாட்டில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர், இதனிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், காற்று மாசை குறைக்கும் வகையில், தமிழ்நாட்டில் பட்டாசுகள் வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களிலும் உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவலர்கள் வீதி வீதியாக சென்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும், பட்டாசுகள் வெடிக்கப்படுகிறதா? என கண்காணித்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version