மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் பயணித்த விமானம் விபத்து!
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் பொலிஸ் அதிகாரியொருவர், 66 வயதான அஜித் பவார் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனக் கூறியுள்ளார்.
விமானத்தில் இருந்த சிலர் காயமடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.




