ஆபத்தான எரிகற்களின் மாதிரிகளுடன் தரையிறங்கிய ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலம்
சூரியனை சுற்றியுள்ள மிகவும் ஆபத்தான சிறுகோளின் மாதிரிகளுடன் நாசாவின் விண்கலமொன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுகோள்கள் என அழைக்கப்படும் சூரியனை சுற்றிவரும் எரிகற்களின் மாதிரிகளுடன் நாசாவின் விண்வெளி கலமொன்று அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த மாதிரிகள் சூரிய குடும்பத்தின் உருவாக்கம் பூமி எவ்வாறு வாழக்கூடியதாக மாறியது என்பதை புரிந்துகொள்வதற்கு உதவும் என விஞ்ஞானிகள் பெரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஏழுவருட விண்வெளி பயண முயற்சியின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. பெனும் எனும் சிறியகோளின் மேற்பரப்பிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒசைரிஸ் ரெக்ஸ் விண்கலம் தரையிறங்கியுள்ளது.விண்கலம் தரையைநோக்கி வருவது உறுதியானதும் நாசாவில் பெரும் மகிழ்ச்சி காணப்பட்டது.
(Visited 16 times, 1 visits today)





