நோயாளியுடன் நெருக்கமாக இருந்த தாதி … உயிரிழந்ததால் விதிக்கப்பட்டுள்ள தடை
நோயாளி ஒருவர் பல்வேறு உடல் நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அவருடன் இரகசிய உறவு வைத்திருந்திருக்கிறார் ஒரு செவிலியர்.இருவரும் நெருக்கமாக இருக்கும்போது திடீரென அந்த நோயாளி உயிர் பிரிந்ததையடுத்து அந்த பெண் செவிலியராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டிலுள்ள Wrexham என்னுமிடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றிவந்தவர் Penelope Williams.அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருடன் Penelopeக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஓராண்டாக நெருங்கிப் பழகிவந்துள்ளார்கள். இந்நிலையில், ஒரு நாள் இரவு, மருத்துவமனையின் கார் பார்க்கிங்கில் நின்ற கார் ஒன்றிற்குள் நெருக்கமாக இருந்துள்ளனர் இருவரும்.
அந்த நோயாளிக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்த நிலையில், திடீரென நிலைகுலைந்துள்ளார் அவர். பயந்துபோன Penelope, தன் தோழி ஒருவரை அழைத்து விடயத்தைக் கூற, அவர் உடனடியாக அவசர உதவியை அழைக்குமாறு கூறியுள்ளார்.ஆனால், விடயம் வெளியில் வந்துவிடும் என பயந்த Penelope அவசர உதவியை அழைக்கவில்லை.
Penelopeஇன் தோழி அவசர உதவியை அழைக்க, அவர்கள் வந்து பார்க்கும்போது அந்த நோயாளி அரை நிர்வாணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
அவர் மாரடைப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளார்.அந்த நபர் பல்வேறு பிரச்சினைகள் உள்லவர் என்று தெரிந்தும் அவருடன் உடல் ரீதியாக நெருங்கிப் பழகிய Penelope தனது தொழிலுக்கும் துரோகம் செய்ததுடன் ஒருவர் உயிரிழக்கவும் காரணமாக இருந்துள்ளார்.ஆகவே, அவர் இனி செவிலியர் பணி செய்யமுடியாது என செவிலியர் மற்றும் தாதியர் கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்டு, அவர் செவிலியர் பணி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது