ஜப்பானில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
ஜப்பானிய குடிமக்களில் 10 பேரில் ஒருவர் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 65 வயதுக்கு மேற்பட்டோர் 29.1% இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் முதியோர்களின் தேவை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஓய்வூதியம் மற்றும் சுகாதார சேவைகளுக்கான நிதி அதற்கேற்ப பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், தொழிலாளர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





