இலங்கை செய்தி

எல்பிட்டியவில் யுவதியின் கொலைச் சம்பவம்!! முச்சக்கர வண்டியின் சாரதி கைது

எல்பிட்டிய பிரதேசத்தில் யுவதியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னர் கடத்தப்பட்டதாக கூறப்படும்  முச்சக்கர வண்டி மற்றும் அதன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சந்தேகத்தின் பேரில் முச்சக்கரவண்டி சாரதி கரந்தெனிய பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டி சாரதி பொலிஸாரிடம் கூறியபோது, ​​தான் வாடகைத் தளத்திற்குச் சென்றதாகவும், பின்னர் குறித்த நபரையும் சிறுமியையும் நாணயக்கார மாவத்தைக்கு அருகில் இறக்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

சந்தேக நபரான முச்சக்கரவண்டி சாரதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலைத் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் 17 வயதுடைய சிறுமியின் சடலம் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சிறுமியின் மைத்துனர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க எல்பிட்டிய மற்றும் கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை