பிரித்தானிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மிகவும் ஆபத்தான கடல் உயிரினம்
																																		மிதக்கும் பயங்கரங்கள் என்றும் அழைக்கப்படும் பல போர்த்துகீசிய மேன் ஓ’ வார்(Portuguese Man O’ War) உயிரினங்கள், பிரித்தானியாவின் பிரபலமான கடற்கரையில் கரை ஒதுங்கியதை அடுத்து, வேல்ஸில்(Wales) கடற்கரைக்குச் செல்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போர்ட் டால்போட்(Port Talbot) கடலோர காவல்படை மக்கள் விழிப்புடன் இருக்கவும், உயிரினங்களைத் தொடுவதைத் தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது.
தற்போது அபெராவோன்(Aberavon) கடற்கரையில் காணப்படும் இந்த உயிரினம் இதற்கு முன்னதாக பெம்பிரோக்ஷயர்(Pembrokeshire), க்வைனெட்(Gwynedd) மற்றும் ஆங்கிள்சி(Anglesey) கடற்கரைகளிலும் காணப்பட்டதாக Express.co.uk தெரிவித்துள்ளது.
போர்த்துகீசிய மேன் ஓ’ வார் உயிரினம் பெரும்பாலும் ஜெல்லிமீன்களாக(jellyfish) கருதப்படுகிறது, அவை வலிமிகுந்த கொப்புளங்கள், காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், கடற்கரையிலிருந்து ஆபத்தான உயிரினங்களை அகற்றும் நடவடிக்கைகளை கடலோர காவல்படை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
        



                        
                            
