பிரான்ஸில் மணிக்கு 230 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த சாரதி ஒருவரின் சாரதி அனுமதி பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 110 கிலோ மீற்றர் அதிகபட்ச வேகம் கொண்ட A4 நெடுஞ்சாலையில் அவர் அதிவேகமாக பயணித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 110 கிலோ மீற்றர் வேகம் கொண்ட A4 நெடுஞ்சாலையில் இளம் சாரதி ஒருவர் மணிக்கு 230 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளார்.
Coutevroult சுங்கச்சாவடியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் போதைபொருள் உட்கொண்டிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவரது சாரதி அனுமதி பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.