ஆப்கன் பெண்களுக்கு அழகு நிலையங்களின் கதவுகள் மூடப்படுகின்றது

தலிபான்களின் உத்தரவின் பேரில் அடுத்த சில வாரங்களில் ஆப்கானிஸ்தான் முழுவதும் சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மூடப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த மூடல்களால் இழக்கப்படும் வேலைகளின் எண்ணிக்கை சுமார் 60,000 என்று கூறப்படுகிறது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சலூன்கள் செயல்பட அனுமதித்துள்ளனர், ஆனால் கடந்த மாதம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.
அதன்படி அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தனர்.
வகுப்பறைகள், ஜிம்கள் மற்றும் பூங்காக்கள் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான் ஆணைகளின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன, மேலும் சமீபத்திய தடை அழகு நிலையங்கள் ஆகும்.
(Visited 6 times, 1 visits today)