பிரித்தானியாவில் திருமண படத்தில் யாரும் அறியாத விருந்தினர் – 4 ஆண்டுகளின் பின் தீர்ந்த மர்மம்

பிரித்தானியாவில் திருமண படத்தில் யாரும் அறியாத விருந்தினர் ஒருவர் 4 ஆண்டுகளின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மிஷேல் மற்றும் ஜான் வாய்லி தம்பதிகள், 4 ஆண்டுகளுக்கு முன்திருமணம் செய்து கொண்டனர்.
எனினும் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஒருவர் முகம் தெரிந்தும், யாரும் அவரை அடையாளம் காண முடியாததால், அது ஒரு மர்மமாகவே இருந்து வந்தது.
எதிர்பாராத விருந்தாளியான அவர் யார் என நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரித்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில், ஒரு சமூக ஊடகப் பிரபலரின் உதவியுடன் அந்த நிழற்படம் இணையத்தில் பகிரப்பட்டதைத் தாம்பதிகள் முயற்சி செய்தனர்.
அந்த நபர் ஆண்ட்ரு ஹில்ஹவுஸ் என்பவர். தவறான முகவரிக்கு சென்றதால் மிஷேல் திருமணத்தில் தவறுதலாக கலந்துகொண்டார்.
நாகரிகத்தைக் கருத்தில் கொண்டு, விழா முழுவதும் தங்கி, பின்னர் தான் செல்ல வேண்டிய திருமணத்திற்கு சென்றதாக விளக்கம் அளித்தார்.
4 ஆண்டுகளாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்ததை தம்பதிகள் நிம்மதியுடன் நினைவுகூர்ந்தனர்.