நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் – இலங்கை அணி அபார வெற்றி

காலியில் இடம்பெற்ற நியுசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
வெற்றிபெறுவதற்கு 274 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 211 ஓட்டங்களிற்கு தனது இரண்டாவது இனிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
208 ஓட்டங்களிற்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த நியுசிலாந்து அணி 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ரச்சின் ரவீந்திர 92 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
பிரபாத் ஜெயசூரிய ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.
(Visited 44 times, 1 visits today)