சிட்னியிலிருந்து நியூசிலாந்து சென்ற விமானத்தில் பதற்றம் – மேடே அழைப்பு விடுத்த விமானி
அவசரநிலை காரணமாக சிட்னியில் இருந்து நியூசிலாந்து சென்ற போயிங் 737 குவாண்டாஸ் விமானத்தில் மேடே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததால் விமானி மேடே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
விமானத்தின் சரக்கு பகுதியில் உள்ள தீ எச்சரிக்கை ஒளிர, இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்று கருதி விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த சூழ்நிலை காரணமாக ஒக்லாந்து விமான நிலையத்தில் பல அவசர சேவைகள் தயார் நிலையில் இருந்தன, மேலும் 16 தீயணைப்பு இயந்திரங்களுடன் சிறப்பு பேரிடர் சேவைகளும் அழைக்கப்பட்டன.
பின்னர், விமானம் காலை 11.05 மணியளவில் ஆக்லாந்து விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது.
விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர், அவர்கள் பாதுகாப்பாக விமான நிலையத்தை அடைந்தனர்.





