முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் பதற்றம் – வணிக வளாகத்தில் துப்பாக்கிபிரயோகம் – பலர் பலி?

அமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகமொன்றில் பாரிய துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டெக்சாஸின் டலஸில் உள்ள அலன் பிரீமியம் வணிகவளாகத்திலேயே இந்த துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிதாக்குதல் காரணமாக எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை என்னால் தெரிவிக்க முடியாது அதனை சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடம் விட்டுவிடுகின்றேன் என காங்கிரஸ் உறுப்பினர் கெய்த்செல்வ் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் கொல்லப்பட்டுள்ளார் ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனவும் காங்கிரஸ் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிதாக்குதலை மேற்கொண்ட ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் சிஎன்என்னிற்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரண்டாவது நபர் ஒருவர் இருக்கலாம் என்ற அடிப்படையில் தேடுதல் இடம்பெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும் துன்பியல் நிகழ்வு என இந்த சம்பவத்தை டெக்சாஸ் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்