தரமற்ற தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் விசாரணை வேண்டும்: சஜித் வலியுறுத்து!
” தரமற்ற தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளதால் இருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இன்று (22) விசேட கூற்றொன்றை விடுத்தே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு, “குமட்டல், வாந்தி மற்றும் தலைச்சுற்று என்பனவற்றைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளில் நச்சுத்தன்மை ஏற்பட்டதால் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே ஐ.டி.எச்.வைத்தியசாலையில் கடுமையாக சுகவீனமுற்று […]




