அவசர நிதிக்கான குறை நிரப்பு பிரேரணை நாளை சமர்ப்பிப்பு!
இலங்கை நாடாளுமன்றம் நாளை (18) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்காகவே விசேட சபை அமர்வு நடக்கின்றது. இதற்கமைய 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை சபையில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இந்த யோசனைக்கு எதிரணிகள் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளன என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதி வசம் நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உள்ளமை […]




