பதவி விலக தயார்: ரணில் அறிவிப்பு! ஐதேக தலைமைப் பதவியை ஏற்பாரா சஜித்?
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதற்கு தான் தயார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவதற்கு தான் தான் தடையென கருதப்படுமானால் இந்த முடிவை எடுக்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின்போதே ரணில் இவ்வாறு தெரிவித்தாரென சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்குரிய பேச்சுகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன. எனினும், […]





