மனோவின் யோசனைக்கு ராதா போர்க்கொடி: மலையகத்தைவிட்டு வெளியேற மறுப்பு!
“மலையகத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று குடியேறுவதற்கு தயாரில்லை. மலையகம்தான் எங்களின் தாயகம்.” இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மலையக மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணி வழங்கப்படாவிட்டால், அவர்களை வடக்கு, கிழக்கில் குடியேற்றுவதற்கு தயார் என தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் அறிவித்திருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் பதிவொன்றை பகிர்ந்தே சுமந்திரன் மேற்படி அறிவிப்பை விடுத்திருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய […]




