பிலிப்பைன்ஸில் வெடித்து சிதறிய எரிமலை – நச்சு வாயுக்கள் கசிவு!
பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள மணிலாவிலிருந்து (Manila) தெற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தால் எரிமலை (Taal Volcano) தற்போது செயல்பாட்டில் உள்ளது. சுமார் 10 நிமிடங்களுக்குள் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சாம்பல் உமிழ்வுகள் அல்லது குறுகிய கால வெடிப்புகள் சாத்தியமாகும் என்று பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் நச்சு வாயுக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பாக பிரதான பள்ளத்திற்கு அருகிலுள்ள பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]





