இலங்கை மீண்டெழ ஐ.நாவிடம் உதவி கோருகிறார் சஜித்!
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மீண்டெழுவதற்காக தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் ஐ.நா. வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் (Mark Andre Franche) இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (17) நடைபெற்றது. இதன்போதே ஐ.நா. பிரதிநிதியிடம், எதிர்க்கட்சி தலைவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறித்த சந்திப்பில், இலங்கையின் சமூக மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. பேரிடர் சூழ்நிலையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள […]




