அரச, தனியார் துறை பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கும் கர்நாடக மாநிலம்!
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை வழங்கும் நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கு பணிப்புரியும் அனைத்து பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை மாதவிடாய் காலங்களில் வழங்கப்படும். இந்தக் கொள்கை பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை சலுகைகளை விரிவுபடுத்தும் இந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது. ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அரசு […]




