அரசியல் இலங்கை

மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள்!

  • November 13, 2025
  • 0 Comments

வடக்கு, கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை தமிழ் மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று (13) நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ ஜே.வி.பியின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கார்த்திகை வீரர்கள் தினம் இன்று (13) நினைவு கூறப்படுகின்றது. இடதுசாரி கொள்கையுடன் போராடிய வீரன் என்ற அடிப்படையில் நானும் அஞ்சலி செலுத்துகின்றேன். […]

அரசியல் இலங்கை

மக்கள்தான் எங்களுக்கு முக்கியம்: எதிரணிகள் ஆட முடியாது!

  • November 13, 2025
  • 0 Comments

ஊடகம்,பணம், அதிகாரம்,குடும்ப பின்னணி எதுவும் இல்லாத நிலையில் மக்களின் எதிர்பார்ப்புடனே ஆட்சியை பெற்றோம். மக்களுடன் தான் எமது பிணைப்பு உள்ளது. எமது முழு அரச செயற்பாடுகளும் மக்களின் பொறுப்கூறலை நிறைவேற்றும் வகையில் உள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம் விஹாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, “ இந்நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புள்ள […]

அரசியல் இலங்கை

நவம்பர் 21 ஆட்சி கவிழ்ப்பு போராட்டம்?

  • November 13, 2025
  • 0 Comments

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது 21 ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்;. இது ஆட்சி கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். ஏனெனில் அடுத்த […]

இலங்கை செய்தி

எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம்

  • November 12, 2025
  • 0 Comments

“நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை மேம்படுத்தப்பட்டு சமத்துவம் கட்டியெழுப்படும்.” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், அரசியல் மாபியாக்களிடமிருந்து விடுபட்ட யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரினார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு […]

இலங்கை

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் பலி

  • November 6, 2025
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி 230 பேர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெருமளவானோர் இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மேற்படி காலப்பகுதிக்குள் நீரில் மூழ்கியவர்களில் 195 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 135 உள்நாட்டு பிரஜைகளும், 30 வெளிநாட்டு பிரஜைகளுமே இவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன. சிலாபம், தெதுரு ஓயாவிற்கு நீராடச்சென்றவர்களில் ஐவர் நேற்று நீரில் மூழ்கி பலியானார்கள். […]

error: Content is protected !!