அரசியல் இலங்கை செய்தி

இலங்கை நோக்கி சர்வதேச பிரதிநிதிகள் படையெடுப்பு: முக்கிய புள்ளிகளை களமிறக்கும் டில்லி, பீஜிங்!

  • December 21, 2025
  • 0 Comments

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியல் குழு தலைவர் ஜாவோ லெஜி நாளை மறுதினம் (23) இலங்கை வருகின்றார். சீனாவில் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அரசாங்கத்தின் மூன்றாவது முக்கிய நபராக இவர் கருதப்படுகின்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) கொழும்புவரும் நிலையிலேயே இவரது விஜயமும் இடம்பெறுகின்றது. ஜாவோ லெஜியின் கொழும்பு பயணம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியாக இருந்தன. இவ்விஜயத்தின்போது அவர் இலங்கை மீண்டெழுவதற்குரிய உதவித்திட்டங்களையும் அறிவிக்க இருந்தார். இந்நிலையிலேயே […]

அரசியல் இலங்கை செய்தி

திங்களன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

  • December 20, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இலங்கைக்கான மேலதிக உதவித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளார் என தெரியவருகின்றது. இலங்கைக்கு உயர்மட்ட பிரதிநிதியொருவரை சீனா அனுப்பி இருந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெறுகின்றது.

error: Content is protected !!