இலங்கை செய்தி

13,781 வீடுகள் முழுமையாக சேதம்!

  • December 17, 2025
  • 0 Comments

டித்வா புயல் தாக்கத்தையடுத்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 13 ஆயிரத்து 781 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அத்துடன், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் (101,055) பகுதியளவு சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பேரிடரால் 643 பேர் உயிரிழந்துள்ளனர். 183 பேர் காணாமல்போயுள்ளனர் என பட்டியலிடப்பட்டுள்ளது. 22 ஆயிரத்து 96 குடும்பங்கள் தொடர்ந்து 723 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!