சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஹமாஸ் – அமெரிக்காவின் அறிக்கையால் பரபரப்பு!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் காசாவில் (Gaza) வாழும் பாலஸ்தீன மக்கள் மீது உடனடி தாக்குதல்களை நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு (Palestinians) எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல் என்றும், மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]