யாசகம் பெற்றேனும் பிழைப்பேன்: பதவி நீக்கப்பட்ட வைத்தியர் கருத்து!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ருக்ஷன் பெல்லன, தனது அலுவலகத்தில் இருந்து இன்று (19) வெளியேறினார். அலுவலகத்தில் இருந்த தனது முக்கிய ஆவணங்களையும் எடுத்துக்கொண்டே அவர் சென்றுள்ளார். வீடு செல்லும் வழியில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு சிரித்தப்படியே பதிலளித்தார் வைத்தியர் ருக்ஷன் பெல்லன. அவரிடம் எழுப்பட்ட கேள்விகளும், வழங்கப்பட்ட பதில்களும் வருமாறு, கேள்வி – இன்று விடைபெறுகின்றீர்களா? பதில் – போகச் சொன்னால், போய்தானே ஆகவேண்டும். […]






