அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் குறித்து ஐ.நா.மகிழ்ச்சி!

  • December 22, 2025
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயல்பட்டதற்கு இதன்போது ஐ.நா. பிரதிநிதி பாராட்டு தெரிவித்தார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதுபோன்ற பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க தனது […]

அரசியல் இலங்கை செய்தி

ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு: அடுத்து என்ன?

  • December 18, 2025
  • 0 Comments

500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதன்போதே டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறும் வகையில் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அனுப்பட்டு, அக்குழுவின் அனுமதி பெறப்படவுள்ளது. குறைநிரப்பு பிரேரணைமீதான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெற்று, வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன்போது அதற்கு ஆதரவாக எதிரணிகள் […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு துணை நிற்கும் சீனா!

  • December 17, 2025
  • 0 Comments

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களின்போது இலங்கையுடன் நெருக்கமாகச் செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிரந்தரக் குழுவின் உப தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கொழும்பு வந்துள்ள வாங் டோங்மிங்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (17) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு, மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் […]

error: Content is protected !!