இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களை கைவிடோம்: ஜனாதிபதி உறுதி

  • December 5, 2025
  • 0 Comments

“ சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மண்சரிவால் வீடுகளை இழந்தவர்களுக்கு காணி வாங்குவதற்கும், வீடு அமைப்பதற்கும் நிதி வழங்கப்படும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, தம்முடன் தற்போது வாழவேண்டியவர்களை நாம் இழந்து தவிக்கின்றோம். சில பகுதிகளில் கிராமங்களே மூழ்கியுள்ளன. உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சிலர் உயிரிழந்திருந்தாலும் […]

அரசியல் இலங்கை

அரசு பொறுப்புகூற வேண்டும்: சஜித் வலியுறுத்து

  • December 5, 2025
  • 0 Comments

வளிமண்டலவியல் திணைக்கள் அதிகாரிகள் 15 நாட்களாக முன் அறிவிப்புச் செய்து கொண்டிருந்த வேளை, தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம், அனர்த்தம் ஏற்பட்ட பின்பு வானிலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பலி எண்ணிக்கை 600 ஐ தாண்டியது!

  • December 5, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 214 பேர் காணாமல்போயுள்ளனர். 4 ஆயிரத்து 164 வீடுகள் முழமையாகவும், 67 ஆயிரத்து 505 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 43 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் 5 லட்சத்து 86 ஆயிரத்து குடும்பங்களைச் சேர்ந்த […]

error: Content is protected !!