இலங்கை செய்தி

ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குளங்கள் பாதிப்பு! 

  • December 5, 2025
  • 0 Comments

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குளங்கள் சேதமடைந்துள்ளன என்று தெரியவருகின்றது. இலங்கை விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் நிர்வாகத்தின்கீழுள்ள ஆயிரத்து 160 சிறு குளங்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன. அநுராதபுரம் , வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறு குளங்களே அதிகளவு சேதமடைந்துள்ளன. இவற்றை புனரமைப்பதற்குரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறு குளங்களை இலங்கை விவசாய அபிவிருத்தித் திணைக்களம் பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்த புயல்!

  • December 5, 2025
  • 0 Comments

இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்தைக் கடந்துள்ளது. சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளளது. 341 பேர் காணாமல்போயுள்ளனர். 2 ஆயிரத்து 303 வீடுகள் முழமையாகவும், 52 ஆயிரத்து 489 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 51 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வெள்ளம் மற்றும் […]

error: Content is protected !!