அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா?

  • December 11, 2025
  • 0 Comments

அவசரகால சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். “ பேரிடர் நிலைமையை எதிர்கொள்ளவே அது அமுல்படுத்தப்பட்டது. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படவில்லை.” எனவும் அவர் கூறினார். எனினும், அவசரகால சட்டம் ஒடுக்குமுறை ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது என எதிரணி குற்றஞ்சாட்டிவருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது இக்குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார். அதேவேளை, “அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக எவரேனும் கருதினால் அது தொடர்பில் […]

அரசியல் இலங்கை

இலங்கையில் பிராந்திய ராஜ்ஜியம் கிடையாது! 

  • November 25, 2025
  • 0 Comments

இலங்கையில் எந்த இடத்திலும் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் இயலுமை தொல்பொருள் திணைக்களத்துக்கு உள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். ஒருசிலர் தமக்கு தமக்கு பிராந்திய ராஜ்ஜியம் இருப்பதாக நினைத்து , தொல்பொருள் சின்னங்களை அகற்றி இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்க முற்படுகின்றனர். இதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் தொல்பொருள் அடையாளப்படுத்தல் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ தொல்பொருள் திணைக்களத்தால் […]

அரசியல் இலங்கை

புதுடெல்லி குண்டு வெடிப்பு: இலங்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

  • November 12, 2025
  • 0 Comments

புதுடெல்லியில் குண்டு வெடித்துள்ள சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அச்சம்பவத்தால் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார். இந்தியாவில் குண்டு வெடித்துள்ளது. எமது நாட்டு தேசிய பாதுகாப்புக்கும் ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், “தற்போது அவ்வாறு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அச்சுறுத்தல் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெறவில்லை. இலங்கையில் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன. […]

இலங்கை

இலங்கையில் ஆபத்தான சூழ்நிலைகளில் இருக்கும் 17000 குழந்தைகள்!

  • October 26, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் 17,000 குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார். வடமேற்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் குழந்தைகளை கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு குழந்தையையும் விட்டு வைக்காமல் ஒவ்வொரு குழந்தையின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் […]

இலங்கை

பாதாள குழுக்களுக்கு முற்றுப்புள்ளி! அமைச்சர் உறுதி!!

  • October 23, 2025
  • 0 Comments

பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எத்தகைய சவால்கள் வந்தாலும் இந்த  விடயத்தில் பின்வாங்கப்போவதில்லை”என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படும். ஒழுக்க விழுமியமுடைய சமூகமொன்று உருவாக்கப்படும் என நாட்டு மக்களுக்கு நாம் உறுதியளித்துள்ளோம். அதற்கமைய நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது. அரசியல் […]

error: Content is protected !!