இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திடீர் சோதனை!
இலங்கையின் அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையான புஸ்ஸா சிறைச்சாலையில் இருந்து 14 தொலைபேசிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் சிறப்புப் படையின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலை தந்திரோபாயப் பிரிவு அதிகாரிகள், இன்று முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் குறித்த தொலைபேசிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தொலைபேசிகளுடன் கூடுதலாக, 25 சிம் கார்டுகள் உட்பட பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)





