இந்திய அணியின் தலைவராகின்றார் சுப்மன் கில்
ஜூலை மாதம் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இணைய சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற இந்திய மூத்த வீரர்கள் டுவென்டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய புதுமுக வீரர்களைக் கொண்ட அணி இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், கடந்த ஓராண்டாக, ரோஹித் சர்மா இல்லாத நிலையில், ஹர்திக் இந்திய டுவென்டி 20 அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார்.
2023 உலகக் கோப்பைக்குப் பிறகு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டுவென்டி 20 தொடரில் சூர்யகுமார் இந்தியாவை வழிநடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.