அடுத்த கிறிஸ்துமஸுக்கும் ஸ்டார்மரே பிரதமர் – ட்ரெவர் பிலிப்ஸ்
அடுத்த கிறிஸ்துமஸுக்கும் கெய் ஸ்டார்மரே (Keir Starmer) பிரதமராக இருப்பார் என சமூக மற்றம் சமத்துவ நிபுணர் ட்ரெவர் பிலிப்ஸ் (Trevor Phillips) தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்த பல கடினமான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் பிலிப்ஸ் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது மக்கள் மீட்சியைக் காணத் தொடங்கியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கடந்த ஆண்டு வாக்களித்த மாற்றத்தின் நன்மைகளை புதிய ஆண்டில், உணர்வார்கள் என்றும் ட்ரெவர் பிலிப்ஸ் (Trevor Phillips) தெரிவித்துள்ளார்.
அவர் தொழிற் கட்சியின் அன்னா டர்லியின் (Anna Turley) கடந்த ஆண்டின் அரசியலையும், ஸ்டார்மரின் நிலைப்பாட்டையும் விளக்கினார்.





