காதலியிடம் பகிங்கரமாக மன்னிப்புக் கேட்ட நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர்

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீர்ரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியை ஏமாற்றியதற்கு சமூக வலைதறத்தில் பகிங்கரமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
அண்மையில் மாடல் அழகி ஒருவருடன் நெய்மர் நெருக்கமாக இருந்ததாக கிசுகிசு செய்திகள் வெளியானது . இதனையடுத்து புருனா பியான்கார்டி-நெய்மர் இருவருக்கும் இடையே கருத்து வெறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காதலி புருனா பியான்கார்டியை தனது கனவுப் பெண் எனவும் வாழ்க்கையின் ஒரு பகுதியான அவள் தன்னுடன் வேண்டும் எனவும் இன்ஸ்டாகிராமில் நெய்மர் உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார்.
விளையாட்டு களத்திலும், வெளியேயும் பல தவறுகளை செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ள நெய்மர் நண்பர்கள் குடும்பத்தினருடன் இருக்கும் போது அவற்றை எல்லாம் சரிசெய்வதாகவும் கூறியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)