39 வருடங்களுக்கு பிறகு இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி
பணப்பற்றாக்குறையில் சிக்கிய இலங்கையின் பொருளாதாரம் 39 ஆண்டுகளில் முதல் முறையாக நுகர்வோர் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஓகஸ்ட் 2024 இல் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5% ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஓகஸ்ட் 2024 இல் 0.8% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.3% ஆகக் குறைவடைந்துள்ளது.
மேலும், 2024 ஓகஸ்ட் 0.4% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5% ஆகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவோர் அனைவரும் வருமான வரியை செலுத்தி முடிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.